கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (6) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில், நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரும், சார்ஜாவில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்த 23 வயதுடைய இளைஞனுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
சந்தேக நபரான பெண் துபாயிலிருந்து இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் மற்றைய இளைஞன் சார்ஜாவிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 04.00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்தநிலையில், சந்தேக நபர்கள் இருவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான 39,200 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 196 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

ரஷ்யாவின் இளைஞர்படை ராணுவத்தில் உக்ரேனியர்கள்! நாசவேலை முயற்சியை முறியடித்ததாக அறிக்கை News Lankasri

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam
