2023 நிதியாண்டிற்கான பற்றாக்குறை 2,404 பில்லியன் ரூபா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில், சமர்ப்பித்த தனது முதல் முழு வரவு செலவுத் திட்டத்தின்படி, 2023 நிதியாண்டிற்கான பற்றாக்குறை 2,404 பில்லியன் ரூபாவாகும்.
இது சதவீதத்தில் 7.9 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவு 5,819 பில்லியன் ரூபா (19.2%) மற்றும் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன் ரூபா (11.3%).
வரவு செலவுத் திட்டம்
சுதந்திர இலங்கையின் 77வது வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் சம்பள கொடுப்பனவுகள் போன்ற தொடர்ச்சியான செலவினங்களுக்காக 4,609 பில்லியன் ரூபாவும், சம்பளம் மற்றும் கூலிக்கு 1,002 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மானியங்கள் மற்றும்
பரிமாற்றங்களுக்காக 1,114 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.