மன்னாரில் பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்
மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகமானது வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (28) காலை 10.30 மணியளவில் முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முதலாவது நீர் விநியோகம்
வடக்கு மாகாணத்தில் 2ஆவது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது கட்டுக்கரை குளத்தில் 8.3 அடி நீர் காணப்படுகிறது. மேலும், கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது.

இந்தநிலையில், கடந்த 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் விநியோகமானது இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர், அரசாங்க திணைக்கள அதிகாரிகள் வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri