நாட்டின் நலனுக்காக 19ஆவது முறையாக கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை ஆரம்பம்
நாட்டில் நிலையான அமைதியும், அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மஸ்கெலியா பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிய 19ஆவது ஆண்டு பாதயாத்திரை நேற்று(04.07.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதயாத்திரையில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் திருநாமங்களைப் பாடியவாறும், காவடிகள் மற்றும் பூஜைப் பொருட்களை ஏந்தியவாறும் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பிள்ளையான் மீது புதிய குற்றச்சாட்டு..! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சிறிநேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நேற்று முதல் விசேட பாதயாத்திரை
இன்று(05) ஹட்டன் நகரை வந்தடைந்த பாதயாத்திரை குழு, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி வழியாக தங்களது பயணத்தைத் தொடர்ந்து சென்றுள்ளது.

இந்த பாதயாத்திரையை வழிநடத்தும் குருசாமி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் சாந்தி, சமாதானம், இன நல்லிணக்கம் மற்றும் அனைத்து மக்களும் நோயற்ற, வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு 19ஆவது முறையாக நடைபெறும் இந்த ஆன்மிகப் பயணம், மஸ்கெலியாவிலிருந்து ஆரம்பித்து ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக பயணித்து, எதிர்வரும் 14ஆம் திகதி கதிர்காமம் புனித தலத்தை சென்றடையவுள்ளோம் என்றார்.

வழி முழுவதிலும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் பிற தேவையான உதவிகளை வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறார்.
இந்த பாதயாத்திரை, மத பக்தியை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்யும் ஆன்மிகப் பயணமாகவும் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

