இந்தியாவிடமிருந்து முக்கிய உதவியைப் பெற அமைச்சரவை அனுமதி
இலங்கையின் 1990 சுவசெரிய அவசர சேவை அம்புலன்ஸ் சேவைக்காக நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய அம்புலன்ஸ்களை இந்திய அரசின் நிதி மானியத்தின் கீழ் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுவசெரிய சேவை
2016ஆம் ஆண்டு இந்தியாவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுவசெரிய சேவை, 2018ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 322 அம்புலன்ஸ்கள் மூலம் நாளொன்றுக்கு 1,000 முதல் 1,200 வரையான அவசர நோயாளிகள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
அத்துடன், ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் கிலோமீற்றர் பயணிப்பதால் பழைய அம்புலன்ஸ்களில் இயந்திரக் கோளாறுகளும் தேய்மானமும் அதிகரித்துள்ளன.