1984 ஆண்டு 2600 வருடம் பழமையான மக்கள் என நிரூபிக்கப்பட்ட தமிழ் பூர்வீக குடிகள் யாழில்

Jaffna
By Independent Writer Apr 06, 2021 08:36 PM GMT
Report

  கீழடிக்கு பிந்திய வெறும் 300 ஆண்டு கொண்ட ஆனைக்கோட்டை மன்னர்கள் நாம்.கரையான் பிட்டியின் சொந்தக்காரர் 1984 ஆண்டு 2600 வருடம் பழமையான மக்கள் என நிருபிக்கப் பட்ட தமிழ் பூர்வீக குடிகள்.மறந்து வாழும் மக்களுக்காக மீண்டும் நினைவூட்டல் இப்பதிவு பெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை என கட்டுரையாசிரியர் ஆனையூரான் எனப்படும் ஜெராட் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆனைக்கோட்டை முத்திரை வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம், புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலையில் வரலாற்றுக் காலத்திற்கான ஆக்கமும் அடிப்படையும் கொடுக்கின்ற வகையில் தோற்றம் பெற்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கை முறையே பெருங்கற்காலம் ஆகும். அந்த வகையில் பெருங்கற்காலம் என்றால் என்ன எனப் பார்க்கின்ற பொழுது இறந்தோரை அடக்கம் செய்வதற்குப் பெருங்கற்களால் ஆனா ஈமச்சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலம் எனப் பெயர்பெற்றது.

இச்சின்னங்கள் வெளித்தோற்றத்தினைக் கொண்டு இவை கல்லறை,கல்மேசை,கந்திட்டை,நடுகல் , கல்வட்டம் போன்ற பெயர்களைப் பெற்றன.எனினும் இக்காலமக்கள் முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே தமது இமச்சின்னங்களைஅமைக்கவில்லை.தாழிகளிலும் குழிகளிலும் இறந்தோரை அடக்கம் செய்தார்கள்.இதனை மணிமேகலையில்‘’சுடுவோர் இடுவோர்தொடுகுழிப்படுவோர் தாழ்வயினடைப் போர் தாழியிற் கவிப்போர் “எனினும் இக் காலம் பெருங்கற்களாலே ஈமச்சின்னங்கள் காணப்பட்டதால் பெருங்கற்கால கலாசாரம் எனப்பட்டது.  

இவர்கள் விட்டுச் சென்ற தடையங்கள் மற்றும் இவர்களைப் பற்றி நாம் அறிய உதவும்சான்றுகள் எனப் பார்க்கின்ற பொழுது கல்லறைகள் ,ஈமத்தாழிகள் , சுடுமண்பாறைகள்,விளையாட்டுப் பொருட்கள் , மட்பாண்டங்கள் , ஆயுதங்கள், பாறை ஓவியங்கள் ,அணிகலன்கள், மணிகள், முத்திரைகள், போன்ற பொருட்கள் உதவுகின்றன.பெருங்கற்காலப்பண்பாட்டிற்குரிய சிறப்பம்சங்களாக இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன்கூடிய பயிர்செய்கை , கருப்பு சிவப்பு மட்பாண்ட உபயோகம் கட்டமைப்புடையசமூகத்தோற்றம் போன்றன காணப்படுகின்றன.

இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவில் இருந்துமட்டும்மல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கானசான்றுகள் கிடைத்துள்ளன. கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி . பி 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப்பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையை காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் பெருங்காலத்தின் மிக முந்திய தோற்றப்பாடு அனுராதபுரத்திலும் சிகிரியா அலிகல ஒதுக்கிடத்திலும் கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி .மு 800 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு காபன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் தென்னிந்தியாபெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூடத் தனித்துவமானதாகவும் விளங்குகின்றது.தீவகப் பிராந்தியத்திற்கான இயல்புகளை இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

உதாரணமாக முருங்கைக்கற்களால் ஆன ஈமக் கோபுரங்கள் , சிப்பியின் படையல்கள் , சுறா முள்ளில்செயப்பட்ட மாலைகள் ,முதலியன தனித்துவமானவை .இலங்கையின் பெருங்கற்கால பண்பாட்டு மையங்களின் பரவலானது வடபகுதியில் இருந்து தென்பகுதி வரை காணப்படுகின்றது.

இருபதுக்கு மேற்பட்ட பெருங்கற்காலக் கலாசாரமையங்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை , கந்தரோடை,வல்லிபுரம், பூநகரி,மாந்தை, தேக்கம் ,பொம்பரிப்பு ,அக்குறுகொட,அனுராதபுரம்,கதிர்காமம், இபன்கட்டுவ,அம்பாந்தோட்ட போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள பெருங்கற்கால பண்பாட்டு மையங்களினை இரு பெரும்பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்தன” என்கிறார் பேராசிரியர் ராகுபதி.

எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்தபெருங்கற்கால பண்பாட்டு ஆனைக்கோட்டை , காரைநகர் (பௌத்த வருகை முன்னர்பெருங்கற்கால பண்பாட்டை வளர்த்தெடுத்த மையங்கள்)· பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள்வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.

1980 களில் குடாநாட்டில் உள்ள நாற்பது புராதன மையங்கள்அடையாளப்படுத்திய பேராசிரியர் பொ. இரகுபதி அதன் தலைமை குடியிருப்பாக கந்தரோடையை குறிப்பிடுகின்றார்.

அனால் இக்குடி குடியிருப்புக்களை பெருங்கற் காலமக்களது பண்பாடடின் சிறப்பாக காணப்படும் ஈமசின்னம் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆனைக்கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டதுபூர்விக வரலாறு பற்றிய ஆய்வில் ஆனைக்கோட்டை முக்கியம் பெறுகின்றது.

ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும். நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேட்டைவெட்டப்பட்ட பொழுது இதில் காணப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் 1980 களில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் அகழ்வு இடம்பெற்றது. இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும் இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் பின்னர் பேராசிரியர்இந்திரபாலா மேற்கொண்ட அகழ்வின் போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமசின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரு ஈம சின்னமையங்களும் பத்து அடி,இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஈமசின்னமையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்படிருந்தன. இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றிவைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கருப்பு சிவப்பு , தனி கறுப்பு சிவப்பு நிறகிண்ணங்கள் வட்டில்கள் , பானைகள் என்பன குறிப்பிடத்தக்கன. சிலமட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள் நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி , சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இப்பண்பாட்டு இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்புகருவிகளும் ,கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.

சிற்பி , சங்கு சுறா மீன் எலும்புகள் இலங்கைப்பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதே சமயம் ஆனைக்கோட்டை மையம் கடலுடன் கொண்ட தொடர்பையும் காட்டுகின்றன.வடமாகாணத்திநை பொறுத்தவரை இங்கு கிடைக்கப்பட எலும்புக்கூடுகள் இரண்டாவது ஆகும். முதலாவது திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த திரு. சண்முகநாதன் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தது.

ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட பிராமி எழுத்து பொறித்த மட்பாண்டம் லட்சுமி நாணயம் உரோம மட்பாண்டம் என்பவறை ஆதாரமாக கொண்டு இரு ஈமசின்னங்களும் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிபடுத்த முடிகின்றது.

எலும்புக்கூட்டின் தலை மாட்டின் அருகில் பெறப்பட்ட வெண்கலமுத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.இதன் காலம் கி.மு 3 நூற்றாண்டு 1.7 , 1.5 cm நீள அகலம் உடையது .இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும் கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன. இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்டுகின்றது .

இது எதானால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழகஇந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார்.

ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ.இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006),அது உலோகத்தால் ஆனது என்றுள்ள போதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக்கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை.

எது விதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். இந்திரபாலாவின் வாசிப்புஇதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார்.

இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும் போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே",மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை"கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்க முடியும் என இந்திரபாலாகூறுகிறார்.

இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன."கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே.சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம்பெற்றுள்ளது.

இக்குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக்குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது. இரகுபதியின் வாசிப்புபொ. இரகுபதி இதனைச் சற்று வேறு விதமாக வாசித்துள்ளார்.

இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்துவாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர்,கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து"கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக்குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள் கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.மதிவாணனின் வாசிப்புமுனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US