கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக, 2025ஆம் ஆண்டில் ரூ.197 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுக்க தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தூதரகத்தின் தலையீட்டின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.197,719,710.36 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகை
இதில் ரூ.23,641,182.00 தொகை, தூதரகத்தின் ஊடாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரூ.174,078,528.36 தொகை, இலங்கையில் உள்ள குடும்ப உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேடமாக, 2014ஆம் ஆண்டு முதல் தீர்க்கப்படாமல் இருந்த சில வழக்குகளுக்கான இழப்பீட்டுத் தொகைகளையும் இம்முறை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே, கடந்த 2024ஆம் ஆண்டிலும் தோஹா இலங்கைத் தூதரகம் ரூ.172 மில்லியனுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை இலங்கை குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.