கோவிட் தொற்றால் 19 வயது யுவதி உயிரிழப்பு
கோவிட் வைரஸ் தொற்று காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவனெல்ல - ஹெம்மாத்தகமை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த இந்த யுவதியின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ளன. கோவிட், நிமோனியா, ஆஸ்துமா, இரத்த அழுத்தம் என்பன இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் 507 பேர் உயிரிழந்துள்ளனர்.
86 ஆயிரத்து 39 பேர் கோவிட் தொற்று உள்ளாகியுள்ளதுடன், இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 3 ஆயிரத்து 19 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.