திருகோணமலை பொது வைத்தியசாலையில் 19 கோவிட் நோயாளர்கள் அடையாளம்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (27) மாத்திரம் 19 கோவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த 72 நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 19 பேர் கோவிட் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் குறுநாவல் நோயாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் மிகவும் கவனமாகச் செயற்படுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வைத்தியசாலைக்கு மாத்திரமல்லாது பொதுமக்கள் அதிகம் கூடியிருக்கும்
இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் முகக் கவசங்களை அணிந்து சுகாதார வழிமுறைகளைப்
பின்பற்றி நடக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri