நெருங்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 187 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது
இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 23 வேட்பாளர்களும் 86 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 19 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் (6) ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan