யாழ்ப்பாணத்தில் ஒக்டோபரில் மாத்திரம் ஹெரோய்னுக்கு அடிமையான 183 பேர் அடையாளம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் மாத்திரம் 183 பேர் உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என்று மருத்துவப் பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 155 பேர் சிறைச்சாலையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். 28 பேர் நீதிமன்றத்தின் ஊடாக அனுப்பப்பட்டடு மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட தாமாக முன்வந்து சமூகமயப்படுத்தல் சிகிச்சையில் இணைந்து கொள்ளும்
உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam