இலங்கைக்கு 10 ஆண்டுகளில் 1800 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
இலங்கைக்கு இந்தியா கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் 1800 மில்லியன் டொலர்களை கடன் வரிகளாக வழங்கியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய லோக்சபாவில் இன்று திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர், எஸ் ராமலிங்கம் கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே, ஜெய்சங்கர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த காலப்பகுதிக்குள் 1850.64 மில்லியன் டொலர்களை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் வரிகள் வழங்கி வைப்பு
தொடருந்து, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் உரம் போன்றவற்றுக்காக இந்த கடன் வரிகள் வழங்கப்பட்டுள்ளதாக என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்தியா, தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.
அத்துடன் கடன்வரிகளுக்கு அப்பால்
இந்தியா, இலங்கைக்கு மனிதாபிமான உதவிகைளையும் வழங்கியுள்ளதாக ஜெய்சங்கர்
குறிப்பிட்டுள்ளார்.