யாழில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞர் பலி
யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை, வறுத்தலைவிளான் பகுதியில் இன்று காலை மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, அவருடன் பயணித்த மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி காங்கேசன்துறை பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளார்.



