வெளிநாடொன்றில் கத்திக்குத்து தாக்குதல்: 18 வயது இளைஞர் பலி
பிரித்தானியாவின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மெத்விக் என்ற இடத்தில் பள்ளிவாசல் ஒன்றிற்கு வெளியே நடந்த மோதலில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று(20.2.2026) இரவு 9 மணியளவில் ஓல்ட்பரி வீதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இளைஞர் ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய 'ஜீஷன் அப்சல்' என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை
இந்த மோதலில் மேலும் 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் மதம் சார்ந்ததோ அல்லது இனம் சார்ந்ததோ அல்ல என்று முதற்கட்ட விசாரணையில் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் கூடுதல் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri