வட் வரியால் டீசல் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு: சபையில் வெளியிடப்பட்ட தகவல்
டீசலின் விலை 63 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் (11.12.2023) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லீட்டர் டீசல் தற்போது 346 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
18 சதவீதமாக வட் வரி விதிக்கப்பட்டதன் பின் ஒரு லீட்டர் டீசலின் விலை ஜனவரி முதல் 63 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
நிபந்தனைக்கு அமைவாக வட் வரி
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வட் வரிக்கு உட்படுத்தப்படும்.
கடற்றொழில் துறை ஏற்கனவே சீர்குலைந்துள்ளது. 18 வீத வட் வரியை நடைமுறைப்படுத்துவது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
