கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை வர்த்தகர்கள் உட்பட பலர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சீன மற்றும் இலங்கை பயணிகள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(30.5.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் அனைவரும் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்களிடம் இருந்த 27 பயணப் பொதிகளை சோதனையிட்டதில், சீனாவில் தயாரிக்கப்பட்ட 209,200 சிகரெட்டுகள் அடங்கிய 1,046 பெட்டிகள், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam