பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 6 பேர் கைது
வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த 17 வயது சிறுவனை வடக்கு அயர்லாந்தின் லண்டன்டெரி மாவட்டத்தின் லிமாவடி பகுதியில் வைத்து சிலர் தாக்கியுள்ளனர்.
பொலிஸ் விசாரனை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது அந்த சிறுவனுடன் 50 வயது மதிக்கத்தக்க நபரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும்,அதிகாரிகள் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |