மட்டக்களப்பில் போதனா வைத்தியசாலையில் 17 வயது யுவதி திடீரென உயிரிழப்பு (Photos)
மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், “தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளை பெற்று அருந்தி வந்த நிலையிலேயே எனது மகளுக்கு திடீரென காய்ச்சலும், வாந்தி நிலைமையும் ஏற்பட்டது. இதனையடுத்தே மகள் உயிரிழந்து விட்டார்” என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
எனினும் இந்த விடயம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் என வைத்தியசாலை தரப்பு தெரிவிப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த யுவதியின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்களை அறியும் முயற்சியை எமது செய்திப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் சம்பவம் தொடர்பான முழுமையான விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
