இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை (Sri Lanka), இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இருநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது .
5 படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவின் காரைக்கால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இயந்திரக் கோளாறு
இதேவேளை தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டின கடற்றொழிலாளர்கள் மூவர் பயணித்த படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மாதகல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு கரை ஒதுங்கிய படகில் பயணித்த மூன்று தமிழக கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam