கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களும் விடுதலை
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்களும் தலா 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதவான் தலைமையில் இன்று (10) இடம்பெற்ற நீதிமன்ற நடவடிக்கையின்போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கற்றொழிலில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு இந்திய இழுவைப் படகுகளையும் அதிலிருந்து 17 இந்திய கடற்றொழிலாளர்களையும், கைது செய்தனர்.
நீதவான் உத்தரவு
பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் (10) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு 20 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை தண்டனை விதித்துள்ளதுடன் நபருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri