உக்ரைனை திணறடித்த 16000 ரஷ்ய ஏவுகணைகள்: மீட்பு போரால் பேரழிவு - உலகசெய்திகளின் தொகுப்பு
ரஷ்யா நடத்தி வரும் இந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் சுமார் 16,000 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யர்கள் அதிகம் குடியிருக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதியான டான்பாஸை மீட்பதாக தெரிவித்து தொடங்கிய ரஷ்யாவின் போர் தாக்குதல், உக்ரைனிய நகரங்கள் முழுவதும் பரவி அந்த நாட்டின் பெருவாரியான உள்கட்டமைப்பு வசதிகளை அழித்தொழித்து உள்ளது.
கடந்த பெப்ரவரி 24 ம் திகதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்ய போர் தாக்குதலானது இன்று ஒன்பது மாதங்களை கடந்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் மீதான தாக்குதல் முடிவை எட்டப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிலையில் கடந்த ஒன்பது மாத போர் தாக்குதலில் ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 16,000 ஏவுகணைகளை ஏவி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஏவுகணை தாக்குதலில் 97 சதவிகிதத்தை ரஷ்யா பொதுமக்கள் மீது குறிவைத்து நடத்தியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,


இலங்கையின் முதல் கரிநாள்...! 30 நிமிடங்கள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
