ஆசிரியரை கத்தியால் குத்திய 16 வயது சிறுமி
காலி போத்தல, காசிதெனிய பிரதேசத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதான சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதான ஆசிரியர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர், கத்தியால் குத்திய 16 வயதான சிறுமியின் தாயாருடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 15 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
