போதைப் பொருளுடன் 16 பேர் கைது
மொறட்டுவை அங்குலான பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட 16 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 16 பேரில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் ஏனையோரில் மூன்று பேருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து இருந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 15 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின், 8 கிராம் கஞ்சா, 40 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், ஆயிரத்து 500 லீற்றர் கள்ளச் சாராயம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 18,34, 40, 43, 55 மற்றும் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இவர்கள் பல முறை பல்வேறு குற்றங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று நீதிமன்ற்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.