இலங்கையில் நாள் தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படும் அபாயம்! கடுமையான எச்சரிக்கை
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மின்சாரப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தேவையற்ற மின் குமிழ்களை பயன்படுத்துவதனை தவிர்ப்பதேயாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் பாரியளவில் செலவினை எதிர்நோக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.
வீடுகளில் தேவையற்ற மின் குமிழ்களை அணைக்க வேண்டுமெனவும், அலுவலகங்களில் காற்று சீராக்கிகளை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்தால் மின்வெட்டு நேரத்தை வரையறுத்துக் கொள்ள முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
