கொழும்பில் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு
கொழும்பில் பல பகுதிகளுக்கு 16 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (13.1.2024) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (14.1.2024) காலை 9 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள்
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் விநியோகத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - மாலை திருவிழா





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
