மட்டக்களப்பில் உயிருடன் பிடிக்கப்பட்ட 16அடி முதலை
மட்டக்களப்பிலுள்ள(Batticaloa) வாவிபகுதியில் பல மாடுகள் மற்றும் நாய்களை பிடித்தும் கடற்றொழிலாளர்களை அச்சுறுத்தி வந்த 16 அடி முதலையை பொதுமக்கள் மடக்கி பிடித்து வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
பிடிக்கப்பட்ட முதலை
உயிருடன் பிடிக்கப்பட்ட முதலையானது, வாவியில் நீர் குடிக்க சென்ற சுமார் 10 மாடுகளை பிடித்து சாப்பிட்டுள்ளதுடன் அந்த வீதி பகுதியில் பல நாய்களையும் பிடித்துள்ளது.
மேலும், கடந்த மழை வெள்ளத்தின் போது அந்த வீதிபகுதியில் உலாவந்துள்ளதுடன் கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளர்களை அச்சுறுத்தி வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு சென்று கார்வையிட்டு வன ஜீவராசிகள் திணைக்கத்திற்கு அறிவித்த நிலையில் அவர்கள் அதனை பார்வையிட்டு அதனை மீட்டு ஏற்றிச் செல்வதற்கு கனரக வாகனம் இன்மையால் வேறு திணைக்களத்தில் இருந்து வாகனத்தை கொண்டுவந்து எடுத்து சென்றுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஓவராக பேசிய அறிவுக்கரசி, தூக்கிபோட்டு மிதித்து சம்பவம் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தரமான புரொமோ Cineulagam