வவுனியாவில் கடுகதி புகையிரதம் மோதி 16 எருமை மாடுகள் பலி
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று காலை கடுகதி புகையிரதம் மோதியதில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள், புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறு மேய்ச்சலுக்காக வரும் மாடுகள் வீதியின் குறுக்காக செல்லும் சந்தர்ப்பங்களும் பதிவாகும் நிலையில் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
