தமிழினப் படுகொலையில் 15 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி
தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினால் மாபெரும் கவிதைப் போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது.
குறித்த போட்டியானது பின்வரும் தலைப்புகளை அடிப்படையாக கொண்டு இடம்பெறவுள்ளது.
01.நினைவழியாமல் வீசும் கந்தகக் காற்று.
02.அதற்குப் பிறகும் ஒரு பூ பூக்கத்தானே செய்தது.
03.நந்திக் கடலோரத்தில் காயும் நிலா.
கவிதை போட்டி
மேற்குறிப்பிட்ட தலைப்புக்களில் ஏதேனும் ஒரு தலைப்பில் 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்குட்ப்பட்டதாக கவிதை அமைய வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு 01 ஆவது பரிசாக 50,000 ரூபாவும், 02 ஆவது பரிசாக 30,000 ரூபாவும் ,03ஆவது பரிசாக 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதுடன் ஆறுதல் பரிசாக 5000 ரூபா பத்து பேருக்கும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவு பரிசில்களும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கவிதை போட்டியில் பங்குகொள்ள ஆர்வமுடையவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 0779133929, 0777782259 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அவர்களது விபரங்களை வழங்கி போட்டியில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை மேலதிக தகவல்களுக்கு தாயக உறவுகள் நினைவேந்தல் குழுவின் தலைவர் முல்லை ஈசனை 0772206776 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளுங்களுமாறும் அறியத்தந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |