15வது சிறுமி துஷ்பிரயோகம் - சிங்கள பாடகர் விளக்கமறியலில்
இணையத்தளம் வழியாக வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு அமைய வரவழைக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிங்கள பாடகரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த பாடகர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 27வது சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இந்த நபர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இணையத்தளம் வழியாக செய்யப்பட்ட விளம்பரம் மூலம் சம்பந்தப்பட்ட சிறுமியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ள சந்தேக நபர், பம்பலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பதிவு செய்யப்பட்டிருந்த அறைக்கு அழைத்துள்ளார்.
அறையை ஒதுக்கி கொடுத்த ஹொட்டலின் முகாமையாளர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம் பண்டாரவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
