இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதல்: மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு(Video)

Sri Lanka Army Mullaitivu
By Chandramathi Nov 27, 2022 11:51 AM GMT
Report

முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினர் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிளைமோர் தாக்குதல்


இராணுவத்தினரின் இந்த தாக்குதலால், அந்த நோயாளர் காவுவண்டியில் பயணித்த பாடசாலை சீருடையுடன் சென்ற மாணவிகளான நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதல்: மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு(Video) | 15Th Anniversary Students Killed In Army Attack

இதேவேளை குறித்த தாக்குதலில் சுகாதாரத் தொண்டர்கள் சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21) ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதல்: மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு(Video) | 15Th Anniversary Students Killed In Army Attack

இந்த உறவுகளின் 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாணவர்களின்நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவு தினத்தில் பொது சுடரினை, சம்பவத்தில் பலியான மாணவிகளில் ஒருவரான சந்திரசேகரம் டிறோசாவின் தந்தை சந்திரசேகரம் ஏற்றி வைக்க சம நேரத்தில் ஏனைய உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து அதற்கான மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US