இலங்கைக்கு அதிகளவில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள்
இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 109 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையைக் கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு ‘இலங்கையைக் காண்போம்’ என்ற ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைவாக இந்த பிரகடனம்
மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
