ஐரோப்பாவில் வெப்ப அலையில் சிக்கி 15,000 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் கடும் கோடை வெப்பத்தில் சிக்கி 15 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜெர்மனியில் 4500 பேரும், ஸ்பெயினில் 4000 பேரும், பிரித்தானியாவில் 3200 பேரும், போர்ச்சுக்கல்லில் 1000 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத கோடைக் காலத்தில் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் இறப்புகள் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் மண்டல இயக்குனர் ஹான்ஸ் ஹென்றி குளூஜ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது,
இந்த வெப்ப உயிரிழப்பு கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பு, கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
இதற்கு, நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தின் மத்தியில், முதலில் வெப்ப அலை தொடங்கி பின்பு, அது ஜூலை மாத மத்தியில் கடும் வெப்ப அலை பரவலான போது பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




