யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்
யுத்தம் நிறைவுக்கு வந்து நீண்ட காலமாகியும் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சுமார் 1512 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றப்படாத குடும்பங்கள்
இவர்களில் சுமார் 10 குடும்பங்கள் இதுவரை தொடர்ச்சியாக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குடும்பங்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் மாறி மாறி வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த 1512 குடும்பங்களைச் சேர்ந்த 4567 பேர் இதன் காரணமாக கடும் துயரங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்வருட இறுதிக்குள் அவர்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri