அமெரிக்க பொருளுக்கு 150% வரி: இந்தியா மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு இந்தியாவில் 150% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், விவசாய பொருட்களுக்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் ஜனாதிபதி நமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் எச்சரிக்கை
இதேவேளை, எங்கள் நாட்டு பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இனிமேல், எங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கட்டும் வரிகளுக்கு நிகரான வரிகளை அமெரிக்காவும் அந்தந்த நாடுகளுக்கு விதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி இந்தியா, சீனா மீதான பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam
