வவுனியாவில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் பலி (Photos)
வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (01.09.2023) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவியந்திரம் ஒன்று பயணித்துள்ளது.
இதன்போது தீடீர் என கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
பொலிஸார் விசாரணை
இதனால் உழவியந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 14 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 23 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
