உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்குள் இணைய "15 அல்லது 20 ஆண்டுகள்" செல்லும்: கிளெமென்ட் பியூன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் முயற்சி முடிவடைய குறைந்தது "15 அல்லது 20 ஆண்டுகள்" ஆகும் என்று பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்நாட்டு சமூக வானொலி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உட்பட புதிய "ஐரோப்பிய அரசியல் சமூகத்தை" உருவாக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மாற்று திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உக்ரைன் இன்னும் 6 மாதங்கள், ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் என்று சொன்னால், நாங்கள் பொய் சொல்கிறோம். அது உண்மையல்ல, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர அநேகமாக 15 அல்லது 20 ஆண்டுகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அது மிக நீண்டது”என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே ஒரு புதிய ஐரோப்பிய அரசியல் சமூகத்தை உருவாக்கும் மக்ரோனின் சமீபத்திய முன்மொழிவுகளின் படி, உக்ரைனுக்கான எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கும் "மாற்றீடாக இல்லை" அதேசமயம் "அதன் எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களைத் தடுக்கவில்லை" என்று பிரெஞ்சு அமைச்சர் தெரிவித்துள்ளார்.