இரவில் பேருந்தில் தனித்திருந்த 15 வயது சிறுமி : பொலிஸார் நடவடிக்கை!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால், தனியார் பேருந்தில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலன்னறுவை நோக்கி பிரயாணிக்க காத்திருந்த தனியார் பேருந்து வண்டியில் இருந்தே சிறுமி கைது செய்ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றுள்ளதுடன் தந்தையின் பராமரிப்பில் இருந்துவந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவதினத்தன்று வீட்டை விட்டு வெளியேறி கல்முனையில் இருந்து பொலன்னறுவைக்கு பிரயாணித்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த பேருந்தில் பிரயாணித்த நோயாளி ஒருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் பஸ்வண்டியை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சாரதி கொண்டு சென்றுள்ளார்.
இதன்படி தனியாக பிரயாணித்த சிறுமிமீது அங்கிருந்த ஒருவர் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, ஏற்கனவே சிறுமி இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் தந்தையர் தான் பராமரிப்பதாக பொறுப்பேற்று அவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளதாகவும், அண்மையில் புத்தளத்திலுள்ள அவரின் மாமியார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளதாகவும், அடிக்கடி இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி சென்று வருவதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஓப்படைப்பதற்காக நீதிமன்றில் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
