சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: 15 பேர் பலி
சீனாவின் கிழக்கில் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது நேற்று(24.02.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ வேகமாக பரவியமையினால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்ததோடு பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கி கொண்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்துள்ளனர். இதன்போது தீ விபத்தில் 15 பேர் பலியானதோடு 44 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மின்சார மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan