தமிழக கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது
முல்லை நாயாறு கடற்பகுதியில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 10 பேரை கைது செய்துள்ளதாக இந்திய பத்திரிகைகள் கூறுகின்றன.
தமிழகத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றது.
இலங்கை கடற்படையினரால் கைது
இந்த நிலையில், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக நாகையை சேர்ந்த 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அத்துடன் அவர்களிடம் இருந்து விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய
பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
கைது செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களும் திருகோணமலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
