கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அக்டோபர் (21.10.2023) திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மறுநாள் (22.10.2023) காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் விநியோகம்
கொழும்பு 11, 12, 13,14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
you may like this,





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
