இந்தோனேசியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 15 பேர் பலி
இந்தோனேசியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று(24.07.2023) அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் படகில் 40 பேர் பயணித்துள்ளதாகவும் 19 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு விபத்து
இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான கெந்தாரிக்கு தெற்கே சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள மூனா தீவில் அமைந்துள்ள விரிகுடாவின் வழியாக படகு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் படகு பிரயாணம் என்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும்.
மேலும் பாதுகாப்புத் தரங்கள் மற்றும் போதுமான உயிர்காக்கும் கருவிகள் இல்லாது படகுகள் பயணிப்பதால் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
