இடைக்கால அரசாங்கத்தில் 15 அமைச்சர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய அமைச்சரவையில் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக இன்று மதியம் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்திருந்தார்.
புதிய அமைச்சரவையில் 15 பேர்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், அடுத்து அமையப்போகும் அரசாங்கத்தின் பிரதமர் யார்? ஜனாதிபதி யார் என்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளதுடன் அதற்கான நகர்வுகள் தீவிரமாக அரசியல் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புதிதாக தற்போது அமைக்கப்பட உள்ள இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தில் 15 அமைச்சரவை அமைச்சர்களே நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த, யோசனை உட்பட பல விடயங்களை இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.