14 வது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் மூன்றாவது நாள் இன்று
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 14 வது சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
14 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி மூன்றாவது நாள் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஆரம்பமான யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
350 காட்சிக் கூடாரங்கள்
இதற்கமைய கண்காட்சியில் சிறந்த தொழில் முயற்சியில் ஈடுபடும் மூதலிட்டாளர்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையிலான கண்காட்சியாக ஆரம்பமானது.
இதன்படி 14 வது சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சியில் 350 காட்சிக் கூடாரங்கள் காணப்படுகின்றன.
இவற்றில் கட்டட துறை பகுதி, தொழில்நுட்ப பகுதிகள், கணணியல் துறை பகுதிகள், உள்ளூர் உற்பத்தி காட்சிக் கூடாரங்கள், வெளிநாட்டு கல்வியியற் பிரிவுகள், தனியார், அரச, கல்வியியற் காட்சிக் கூடங்கள், வாகன விற்பனை சந்தைகள், சிற்றுண்டி வகைகள், மின்னியல் சாதனங்கள் மற்றும் மின்சாரப் பொருள்கள் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
14 ஆவது ஆண்டு வர்த்தக் கண்காட்சி
மேலும் சிறு முயற்சியாளர்களுக்கு 10 இலவசமாக கூடாரங்களும், தொழில்முனைவோர்களுக்கும் 10 இலவசமாக கூடாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், சிறிய முதலீட்டை கொண்டுள்ளவர்களுக்கு முன்னுரை அடிப்படையில் இவை வழங்கப்பட்டுள்ளன.
பிரதேசத்தில் சிறந்தமூதலீட்டினை ஊக்குவிப்பதை ஓர் இலக்காகக் கொண்டு 14 ஆவது ஆண்டு வர்த்தக் கண்காட்சி விளங்குகின்றது.
மேலும், இம்முறை 2000 பேர் அளவிலான தென்னிலங்கை முதலீட்டாளர்களும் இங்கு வந்து தமது சந்தைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
