வெளிநாடுகளில் பணியாற்றும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் பலி!
வெளிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்கள் 4800 பேர்வரை கோவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 4600பேர் பூரண குணமடைந்துள்ளனர். இவர்களில் இதுவரை 142 பேர் மரணித்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்தவர்களாகும். இதனால் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
இதன்படி, தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்வதற்கு தேவையான தொழில் ஒப்பந்தம், விசா அனுமதி பத்திரம் மற்றும் தொழில் நியமனம் பத்திரம் பெற்றவர்கள் கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
