இரணைமடுக் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் சடலமாக மீட்பு
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்று வரும் முறிகண்டி - வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
தேடுதல் பணி
இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சிவறுனை தேடும் பணியில் இரணைமடு கடற்றொழிலாளர்களும், பிரதேச மக்களும் நீண்ட நேரமாக தேடி வந்த நிலையில் நேற்று மீட்க முடியாது போயுள்ளது.
மேலும், இன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல்: எரிமலை





| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan