கடலில் நீராடச்சென்ற 14 வயது சிறுவன் மாயம்!
காலி - கொக்கல பகுதியில் உள்ள கடலில் நீராடச்சென்ற 14 வயதுடைய சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரகாபொலவில் இருந்து சுற்றுலா சென்று கொக்கல முகத்துவாரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடச் சென்ற சிறுவனே நேற்று (29.009.2023) மாலை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரகாபொல, மில்லகஹதொல, கணித்தபுர பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிவ ஆகாஷ் என்ற சிறுவனே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரதேச மக்கள் விசனம்
இந்நிலையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கடற்படை வீரர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வந்த மாணவன் ஒருவரும் இந்த இடத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இதேவேளை, இன்று பிற்பகல் கொக்கல கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவரும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான பாதுகாப்பற்ற இடங்களில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை நீராட அனுமதிக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
