ஒட்டுசுட்டானில் 14 வயது சிறுவன் மாயம்! தீவிர தேடலில் பொலிஸார்..
ஒட்டுசுட்டான் இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த அசோக்குமார் அரவிந்தன் 14 வயதுடைய சிறுவன் கடந்த 05.12.2025 வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வீட்டிலிருந்து வலதுகரையில் உள்ள கடை ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்த நிலையில் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
CCTV காட்சிகள்
சிறுவன் குறித்த கடையில் பொருட்கள் வாங்கிச் செல்வதாக உள்ள CCTV காட்சிகள் பதிவாகியுள்ளன.

எனவே சிறுவனை கண்டு பிடித்துத்தருமாறு உறவுகளினால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் தொடர்பான எந்த தகவலையும் அறிந்தவர்கள் தயவுசெய்து கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
காணாமல் போன சிறுவன் தொடர்பில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.