கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மீது கடுமையான தாக்குதல்
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம்14 வயது சிறுவனொருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அப்பகுதியில் தொடர்ச்சியாக அனைவருடனும் முரண்பட்டு வந்த நபரொருவரே சிறுவனை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபரொருவர் அண்மைக்காலமாக பளையில் வசித்து வரும் நிலையில் அவர் கிராமத்தில் உள்ள அநேகமானவர்களுடன் வீண் தகராறுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நபர் மீது பளை பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயாரை அந்த நபர் தகாத வார்த்கைளால் பேசிய நிலையில் மகன் ஆத்திரமடைந்து நியாயம் கேட்பதற்காக சென்ற போது கடுமையாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் சிறுவன் கழுத்தில் கடும் காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
