சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற 14 பேர் கைது
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றவர்களில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் ஹஷிஷ், கஞ்சா கலந்த மோதக மாத்திரைகள் மற்றும் புகையிலை கலந்த மாவா ஆகியவற்றை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப்பொருள் கொண்டு சென்றவர்களை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து, நல்லதண்ணி, மஸ்கெலியா, பொல்பிட்டிய, நோர்டன்பிரிட்ஜ், கினிகத்தேனை மற்றும் நோர்வூட் ஆகிய பொலிஸ் நிலைய பொலிஸாரின் உதவியுடன் இவ்வாறு 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 25 - 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், அதிகமான ஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டு சிவனொளிபாதமலை யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பல தனியார் பேருந்துகள் சோதனையிடப்பட்டதுடன், குறித்த பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக சாதனங்களை அகற்றி அப்புறப்படுத்துமாறு பேருந்து ஓட்டுநர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 நாள் முன்

பிரெக்சிட்டால் பிரித்தானியாவுக்கு பெரும் இழப்பு: ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வற்புறுத்தல் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam
