பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்! பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்கள்
பொரளையில் உள்ள தேவாலயமொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இன்னும் நிறைவடையவில்லை என பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொரளை பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தற்சயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆதாரங்கள் பதிவு செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இதுவரை 14 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப முறைகள் நிபுணர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri